வாழ்க்கை கற்று தரும் சில முக்கியமான பாடங்கள் என்ன தெரியுமா? [இந்த டீச்சர் வைக்குற பரீட்ச்சைக்கு முன்னாடியே யாராவது வினாத்தாள் அவுட் பண்ணினா எவ்வளோ நல்லா இருக்கும்]
நான் வினாத்தாள் தர போறது இல்ல.. ஆனா இந்த கேள்வி எல்லாம் பரீட்ச்சைல கண்டிப்பா வரும்ன்னு தான் சொல்ல போறேன்.. அதை படித்து பரீட்ச்சைக்கு தயார் ஆவதும் இல்லன்னா சாய்ஸ்ல விட்டுடாலம்னு முடிவு பண்ணிக்குறதும் அவங்க அவங்க விருப்பம் தான்!!
- நீ என்ன தான் புரண்டு புரண்டு அழுதாலும் உனக்கு கிடைக்கிறது தான் உனக்குகிடைக்கும். [ஒட்டுற மண்ணு தாண்டி ஒட்டும்]
- வாழ்க்கைல நான் அழுததே இல்லைன்னு இருபது வயசுல பெருமிதம்கொள்ளவே கூடாது.. வாழ்க்கைன்ற விஷயமே இருபத்தி மூணு வயசுல தான்ஆரம்பிக்குது.. அது வரைக்கும் நாம வாழுறது நம்ம பெற்றோரின் வாழ்க்கை தான்.
- ஒருத்தரை எவ்வளோ தான் உயிரா நேசிச்சாலும் அவங்களை சார்ந்து தான்என்னோட வாழ்க்கைங்கற நிலைமைக்கு மட்டும் போகாதீங்க.. ஏன்னா அவங்கஇல்லைங்கற நிலைமை வரும் பொழுதுதான் நாம எவ்வளோ பெரிய தப்பசெஞ்சிருக்கோம்னு நமக்கு புரியும்.. உங்கள விட்டுட்டு போன அந்த உயிருக்குகண்டிப்பா மோட்சம் கிடைச்சிரும் ஆனா நம்ம விதி நமக்கு மோட்சம்தியேட்டர்ல டிக்கட் கூட கிடைக்க விடாது..
- வாழ்க்கைல முன்னேறனும்னா என்ன ரிஸ்க் வேணாலும் எடுக்கலாம்னுசொல்லுவாங்க.. ரிஸ்க் எடுக்கலாம் அது தப்பே கிடையாது.. உயிரை பணயம்வைக்கலாம்.. ஏன் வாழ்க்கையை கூட பணயம் வைக்கலாம்.. ஆனா நிம்மதிய மட்டும் எதுக்காகவும் யாருக்காகவும் பணயம் வைக்காதீங்க.. ஒரு விஷயத்தைபண்ணும் போது சந்தோஷம் தருது ஆனா பிற்காலத்துல பண்ணின விஷயம்நம்மள நிம்மதியா இருக்க விடாதுன்னு தோணிச்சுன்னா தயவுசெய்து அதைசெய்யவே செய்யாதீங்க.. நிம்மதி இல்லேன்னா உயிரோட இருந்து ஒருஉபயோகமும் இல்லை.. எனக்கு தெரிஞ்சு நிம்மதிய பணயம் வைக்குற அளவுக்குஇந்த உலகத்துல எந்த விஷயமும் உயர்ந்தது இல்ல..
- வாழ்க்கைல எப்போ ஒரு விஷயத்தை நிரந்தரம்னு நினைக்க ஆரம்பிக்கிறோமோஅன்னிக்கு ஆரம்பிக்குது நமக்கான கெட்ட நேரம். நிரந்தரமான பொருள், சந்தோஷம், துக்கம் எப்படி சாத்யமில்லையோ அதே போல சுயநலமற்றமனிதனை உலகத்தில் பார்ப்பதும் அசாத்யமான ஒன்று!
- ஆம்பூலன்சுக்கே வழி விடாத இந்த மனிதர்கள் உங்களோட அவசரத்துக்கு வழிவிடுவாங்களா? வாழ்க்கைல நீங்க எவ்வளோ அவசரமா போய்கிட்டு இருந்தாலும்உங்களுக்கு முன்ன போறவன் அவனோட இடம் வந்தா தான் வண்டிய மிதவேகத்துக்கு கொண்டு வந்து ஒதுங்குவான்..
- நமக்கு நடக்கும் நல்ல விஷயத்தை ஊருக்கே சொல்லுவோம்.. கெட்டவிஷயத்துக்கு அழும் போது அது என்னமோ தெரில எல்லாரும் ராத்திரி இருட்டுலதனியா தான் அழறோம்..
- மத்தவன் பிரச்சனைக்கு அட்வைஸ் கொடுக்கும் போது நல்லா தான் இருக்கும்.. நம்மளோட அதே பிரச்சனைக்கு தீர்வு தெரியாம முழிப்போம்.. அடுத்தவன்வாழ்க்கைக்கு வழிகாட்டியா போவோம் ஒரு இடத்துக்கு மேலே அவன்அவனோட வழிய பாத்துட்டு போய்டுவான்.. அப்போ தான் அங்க இருந்து நாமஎங்க போறதுன்னு தெரியாம தடுமாறுவோம், அதோட எங்க இருந்து வந்தோமோஅங்க திரும்பி போகவும் வழி தெரியாது. .
- சுற்றமும் நட்பும் சுற்றி சுற்றி வரும் அவங்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புவரும் வரை ;)
இப்படி நெறைய இருக்குங்க.. அப்போ அப்போ அதெல்லாம் எழுதுறேன்.
வாழ்க்கை!!
நீ சிரிக்க சொன்னால் அழுது காட்டும்,
நீ பறக்கச் சொன்னால் உறங்கிக் காட்டும்,
நீ கதறி கதறி அழுக சொன்னால் கேலி செய்து பழிப்பு காட்டும்..
வாழ்க்கை- நீ சொல்லும் உணர்ச்சியை
வெளிகாட்ட முடியாத ஒரு புது நடிகன்..
கதாநாயகனா, வில்லனா அல்லது சிரிக்க வைப்பவனா
என முடிவு செய்வது நீ கற்கும் பாடங்களே!!
-
மதி.