Thursday, December 11, 2008

நிலவிடம் பேசிய தருணங்கள்......

நானும் நிலாவும் ஆருயிர் தோழிகள் தெரியுமா?! :-)

எனக்கு நிலாவ ரொம்ப பிடிக்கும்.. வாழ்க்கைல சின்னப்புள்ள தனமா மனசு வேதனை பட்ட தருணங்கள், ரொம்ப பெரிய ஆளு மாதிரி பெருமைக்கொண்ட சில நேரங்கள், எப்போ பாத்தாலும் கெக்கேபிக்கேனு சிரிசிட்டிருந்த நாட்கள், இப்படி எல்லாத்தையும் நான் நான் ரொம்ப சின்ன வயசுல இருந்தே நிலாகிட்ட தான் பகிர்ந்துட்டு இருந்துருக்கேன், ஏழு வருஷங்களுக்கு முன்ன வர!

கல்லூரி முதல் வருஷம் படிச்சிட்டு இருந்தப்போஒரு நாள் "ETHNIC DAY" ன்னு சொல்லி புடவை கட்டிட்டு வர சொன்னாங்க.. நானும் கருப்பு நிறத்துல வாடாமல்லி நிறத்துல பூ போட்ட ஒரு புடவைய கட்டிட்டு போனேனா.. அது தான் நான் என் காலேஜ் நாட்கள்ல முதல் தடவ புடவை கட்டிட்டு போனது!

நான் தான் சும்மா அஞ்சடி எட்டங்குலதில நல்ல உசரமா இருக்குற பொண்ணாச்சே, அதனால ஒரே பாராட்டு மழை தான் போங்க.. இந்த சந்தோஷத்துல மதியம் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்த நானு புடவையை மாத்திக்க மனசே இல்லாம நிலா வர நேரம் வரைக்கும் காத்துட்டு இருந்தேன்..

கொஞ்சம்போல பொழுது சாஞ்சதும் மொட்டமாடிக்கு போயிட்டு நான் நிலாவ தேடிட்டு இருந்தேன்.. என் கூட கொஞ்சநேரம் மேகத்துக்கு நடுவுல ஒளிஞ்சிகிட்டு கண்ணாபூச்சி ஆட்டம் காட்டிடுத்தான் எனக்கிட்ட முகத்தையே காட்டினா அவ.. கொஞ்ச நேரம் அவக்கூட ஊடல் அப்புறமா என் சந்தோசத்தை ஆசையா அவக்கிட்ட சொன்னேன்.. இதைப்போல ஒரு ஒரு குட்டி குட்டி சந்தோசத்தைக்கூட நான் நிலாக்கிட்ட தான் பகிர்ந்துப்பேன்!

காலேஜ்ல அரியர்ஸ் வச்சது, காலேஜ் கட் அடிச்சிட்டு ஊர் சுத்தினது, அப்பா திட்டினது, பர்ஸ தொலைச்சது, இப்படி எது நடந்தாலும் நிலாக்கிட்ட தான் சொல்லுவேன் !!

அம்மா கிட்ட இருந்து மறைக்குற விஷயம் என்க்கிட்ட ரொம்ப கம்மி ஆனா அதெல்லாமே நிலாக்கு தெரியுமே :-)

நிலாக்கிட்ட நான் எல்லாத்தையும் மனம் விட்டு பேசிட்டு இருந்த வரைக்கும் வாழ்க்கைல நான் அழுததா ஞாபகமே இல்லை! உண்மைய சொல்லனும்னா நான் அழுததே இல்லை மனசு கஷ்ட்டப்பட்டு!

வாழ்க்கைல குழப்பங்கள் வந்ததால நிலாகிட்ட பேசுறது நின்னுப்போச்சா இல்லைனா, நிலாகிட்ட பேசுறது நின்னு போனதால வாழ்க்கைல குழப்பங்கள் வர ஆரம்பிச்சிசான்னு எனக்கு தெரியல :-)

ஆனா குழப்பங்களை நாம தனியா தான் சந்த்திசாகனும் என்று மட்டுமின்றி, யாரையாவது ஒருத்தரை சார்ந்தே இருக்கக்கூடாது அப்படின்ற இன்னொரு விஷயத்தையும் எனக்கு புரியவச்சது என் நிலா தான்!

"உறவுக்கு பிரிவுண்டு ...
நிலவுக்கும் தேய்வுண்டு..."
-மதி.

"நட்புடன் இருப்போம், இருப்பினும் நாமாக இருப்போம்..
காதல் கொள்வோம், நம்மீதும் அக்கறை கொள்வோம்..
சேர்ந்தே செய்வோம், ஆயினும் சாராதிருப்போம்.."
-மதி.

நாங்க இப்போ பேசிக்குறது இல்ல.. ஆனா என்னிக்கா இருந்தாலும், என்னதான் ஆனாலும், எனக்கு நிலா தான் உயிர் தோழி!! :-)


"என் ஒற்றை நிலவே..
அங்கேயே நீ.. இங்கேயே நான்..
உன்னை போலவே நானும் தனியாய்..
தேய்ந்துக்கொண்டும் பின்பு வளர்ந்துகொண்டும்"
-மதி.

5 comments:

கொடும்பாவி-Kodumpavi said...

நிலா - மதி ..
இப்ப புரியுது பெயர் காரணம்.
நிலாவின் ஒளியால் தான் இரவு கருமையான இருட்டு என்று அறிய முடிந்தது.
இரவிலும் வெளிச்சம் என்ற எண்ணம் வர காரணமே நிலவுதான்.
மனிதன் அங்கும் சென்று தன் சுவடுகளை பதிக்கிறான்.
பூவுலகின் ஒரே 'துணைக்கோள்' (துணைகேள் அல்ல) நிலவுதான்.
என்னதான் பீஸா போன்று மனித படைப்புகளான செயற்கை கோள்கள் இருந்தாலும் இட்லி போன்று உடலுக்கும் உள்ளத்துக்கும் அமைதியை தருவது நிலாதான்.
- கொடும்பாவி

கொடும்பாவி-Kodumpavi said...

நிலா - மதி ..
இப்ப புரியுது பெயர் காரணம்.
நிலாவின் ஒளியால் தான் இரவு கருமையான இருட்டு என்று அறிய முடிந்தது.
இரவிலும் வெளிச்சம் என்ற எண்ணம் வர காரணமே நிலவுதான்.
மனிதன் அங்கும் சென்று தன் சுவடுகளை பதிக்கிறான்.
பூவுலகின் ஒரே 'துணைக்கோள்' (துணைகேள் அல்ல) நிலவுதான்.
என்னதான் பீஸா போன்று மனித படைப்புகளான செயற்கை கோள்கள் இருந்தாலும் இட்லி போன்று உடலுக்கும் உள்ளத்துக்கும் அமைதியை தருவது நிலாதான்.
- கொடும்பாவி

VIKNESHWARAN ADAKKALAM said...

:))

MaDhi said...

@Kodumpavi: :-)

@Vikneshwaran: y :)) ?

ச. ராமானுசம் said...

உங்களுக்கு நிலா friend-நா ..
எனக்கு சந்திரன் friend...
சின்ன சந்தேகம் ...அம்மாவசை அன்று என்ன செய்விர்கள் ?