சனிக்கிழமை அலுவல் முடிந்து ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன்.. வீட்டை நெருங்குகையில் கைப்பையில் இருந்து ஆட்டோக்கு கொடுக்க எடுத்த எனது நூறு ரூபாய் தாளை காற்று கவர்ந்து சாலைக்கு எடுத்துக் கொண்டு ஓடியது.. பதறிய நான் சுதாரிக்கும் முன்பு, சாலையில் சென்று கொண்டிருந்த அனைத்து வாகனமும் சுதாரித்தது தான் மிக பெரிய ஆச்சரியமே.. வேகமாக சென்று கொண்டிருக்கும் வாகங்களில் இருந்து மக்கள் எப்படி இந்த நூறு ரூபாய் தாளை கண்டுகொண்டார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது..
பின்னால் வேகமாக வரும் வாகனங்களை கூட கண்டுகொள்ளாமல் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சட்டென நிற்க, அவருக்கு முன்னாள் சென்ற நான்கு சக்கர வாகனமும் ஓரங்கட்டியது எனக்கு அதிர்ச்சி.. பின்னால் வந்த அனைத்து வாகனமும் சட்டென நிற்க என அங்கே கொஞ்சம் கூட்டமும் சேர்ந்தது.. இவை அனைத்தும் ரூபாவை தவற விட்ட நான் சுதாரிக்கும் முன்பு நடந்தது!!
நான் வந்த ஆட்டோ ஓட்டி இறங்கி சென்று அது எனது என நிரூபித்து வாங்கி வந்து விட்டு சொன்னார்.. "எப்படி தான் ரூபாய்னு தெரிஞ்சு வண்டிய நிறுத்துரான்களோ" என்று!!
பத்து ரூபாய்க்கு எல்லாம் ஆசை படுவாங்கமா இவனுங்க அல்ப்ப பயலுங்க என்றார்.. வீட்டின் முன்பு என்னை இறக்கி விட்டு "மா பத்து ரூபாய் மேல போட்டுக் கொடுமா " என்றார்!!
நல்ல உடை அணிந்து, நல்ல வாகனங்களில் செல்லும் மக்களுக்கு, சாலையில் ரூபாய்த் தாளை பார்த்தால் உயிர் பயம் கூடவா இல்லாமல் போகும்?!!
Sunday, March 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பணம் பத்தும் செய்யும் - பழமொழி
நூறு ரூபாய்க்கு மதிப்பு இருக்குங்க ஆனா உயிருக்கு ?
மதிப்பு தெரிவதில்லை. அது தெரிஞ்சாதான் நாட்டுல எத்தனையோ பிரச்சனைகள் இல்லாமல் போகுமே.!
Post a Comment