இந்த பதிவுக்கு காரணம் "கொடும்பாவி"!! அவர் என்னை கேட்ட கேள்வி "உலக மகளிர் தினம் பத்தி என்ன நினைக்குறீங்க?" கேள்விக்கு நன்றி!! :-)
மகளிர் தினம் மூலமா தான் பெண்களை கொண்டாடனும்னு இல்லை, வருஷத்துல 365 நாட்களுமே கொண்டாட பட வேண்டியவர்கள் தான் பெண்கள் ஆகிய நாங்கள்!!
எனக்கு இந்த 33% அப்படிங்கற விஷயத்துல நம்பிக்கை இல்லை.. என் வீட்டிலேயே கூட என் அண்ணனுக்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை.. அதை பாகுபாடாக நான் எண்ணவில்லை.. பாதுகாப்பாக தான் உணர்கிறேன். பெண்களுக்கு உரிமைக் கொடுக்க வேண்டியதை பற்றி பேசும் முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்!! இன்னமும் பெண்களால் இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்கையில் பயம் இல்லாமல் சென்று சேர முடியவில்லை.. சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் முதல் ஆட்டோ ஓட்டுனர்கள் வரை பாகுபாடில்லாமல் தனியே வரும் பெண்களிடம் தவறாக நடக்கவே முயல்கிறார்கள்!! ஒரு பெண் இங்கே பகலிலேயே சுதந்திரமாக செல்ல முடியவில்லை இதிலே இரவினில் எங்கே போவது? அதுவும் கழுத்து நிறைய நகையுடன்!!
பெண்களை மதிப்பதும், கொண்டாடுவதும் ஒரு புறம் இருக்கட்டும் எங்களை தைரியமாக, நிம்மதியாக, மரியாதையாக ஊருக்குள்ளே நடமாட உதவும் சமுதாயமாக இந்த உலகத்தை மாற்றுங்கள், அதைவிட நாங்கள் பெரிதாக என்ன கேட்டுவிட போகிறோம்?
பெற்றவளை மதிக்கவும், உடன் பிறந்தவளை பாதுகாக்கவும், உங்களுக்குப் பிறந்தவளை நேசிக்கவும் தெரிந்த நீங்கள் உடன் வேலை பார்க்கும், பயணிக்கும், நடமாடும் பெண்களையும் அசுவாசமாக சுவாசிக்க விடுங்கள்.. உங்களுக்கு பயந்து ஓடி ஓடி நாங்கள் மூச்சடைப்பது, வாழ்கையையே சில சமயம் கேள்வி குறியாக்கி விடுகிறது!!
எங்களை மதியுங்கள், கொண்டாடுங்கள், இதெல்லாம் செய்வதற்கு முன்பு எங்களுக்கான பாதுகாப்பை தாருங்கள்!!
We've been only asking for something we've lost & something we deserve.. Right to Live on this earth without fearing a co-human!!
I am wishing every women out there a very "Happy Womens Day"!! Lets take an oath to be brave, bold & brilliant to tackle this insecure world around us.
Sunday, March 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எங்களை மதியுங்கள்.. பாதுகாப்பு தாருங்கள்.. யாரிடம் கேட்குறீங்க..? என்னைப் பொறுத்த வரை ‘வன விலங்கு ‘ வாரம்.. ‘சுற்றுச் சூழல்' நாள்.. இது போன்ற நாட்கள் கொண்டாடுவதற்கு காரணம் இவை எல்லாம் மறந்து மறைந்து வருவதுதான். மகளிரும் இதில் அடங்குவதுதான் பெரும் கொடுமை! உயிர் ஜனிக்க உதிரம் கொடுத்து தன் வாழ்வின் விருப்பு வெறுப்புகளை விழுங்கி, புகுந்த வீட்டிற்கேற்றார் போல் மாற்றி, பிறந்த வீட்டையும் மறக்காமல், பிள்ளைகளின் வாழ்வை அமைத்து, குடும்பத்திற்காகவும் உழைத்து (வீட்டிலும் வெளியிலும்) இப்படி யார் எது சொன்னாலும் சக்தி மிகுந்திருந்தும் 'சிவனே' என்று கேட்டு பூரித்து போய் உயிருள்ள சிலையாய் நின்று குலம் காக்கும் தெய்வங்களான பெண்களை என்னவென்று சொல்வது.? முதலில் அவர்களுக்கு தங்களிடமிருக்கும் தன்'நம்பிக்கை'யை அறிய வேண்டும். அதற்காக கண்மூடித்தனாமாக அதிக நம்பிக்கையும் கூடாது. இரு கைகள்தான் நல்ல ஓசை எழுப்பும். தனிஞ்சு போனாலும் துணிஞ்சு நிக்கணும்.. பணிஞ்சு போனாலும் பயந்து போகக்கூடாது.. 'பெண்ணாக பிறக்க வில்லையே' என்று எண்ணும் ஆண்களில் ஒருவனாக இதை சொல்கிறேன்.
இன்றும் ‘படித்தவர்' களில் பெரும்பாலானவர்கள் கூறும் கூறிய சொற்கள் குழந்தை பிறந்தவுடன் ‘அட பொண்ணா ?' அல்லது ‘பையனா - very good' இவர்கள் யார் சான்றிதழ் கொடுக்க.? இது போன்ற கேள்விகளையும் கருத்துகளையும் தங்கள் வீட்டில் வளரும் பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டே கூறுவதுதான் மகா கொடுமை.
இத இத்தோட நிறுத்திக்கறேன் இல்லன்னா என் புலம்பலும் நிக்காது. ஆத்திரம் அடங்காது. அட இந்த சமூகத்தின் மேல்தான் ..!
Post a Comment