எனக்கு ஒரே ஒரு அண்ணா அப்புறம் ஒரே ஒரு தங்கை..
அண்ணா ரொம்ப வித்தியாசமான கதாபாத்திரம்..
யார் வம்புக்கும் போகாம, மத்தவங்களை எதுக்குமே தொல்லை பண்ணாத ஒரு நல்ல முறையில் வளர்க்கப்பட்ட ஒரு பையன். அவனுக்கு நெறைய நண்பர்கள் இருகாங்க.. ஆனா நானும் ரொம்ப நெருக்கமான ஒரு தோழி. கெட்ட பழக்கம் எதுவும் என் அண்ணாக்கு இல்லைன்னு எனக்கு ரொம்ப பெருமை கூட :)
இவன் இருக்கானே.. அதாங்க என்னோட அருமை அண்ணன்.. வீட்டுக்கு வர ஒரு விருந்தாளியையும் விட்டு வைக்க மாட்டான். விருந்தாளிங்க இருக்குற வரைக்கும் அய்யா வாய கூட திறக்க மாட்டாரு.. ஆனா அவங்க போன அப்புறம் இவன் அவங்கள பத்தி அடிக்குற கிண்டல் இருக்கு பாருங்க அத கேட்டா அவங்களுக்கு முகத்துல ஈ ஆடாது ..
எங்க வீட்டு குளிர் சாதன பெட்டில [அதாங்க fridge] ஒரு சாக்லேட் வாங்கி வச்சிட கூடாது கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பாத்தா கண்டிப்பா இருக்காது.. ஆனா அவனா காசு குடுத்து சாக்லேட் வாங்கி சாப்பிட்டதே இல்லை :(
இதை விட ஒரு கொடுமை இருக்குங்க.. காலைல குளிச்சு சாப்பிட்டு நல்லா இஸ்த்ரி பண்ணி வச்ச டிரெஸ்ஸ எடுத்து போட வேண்டியது.. வாசல் வரைக்கும் போயிட்டு வந்து கட்டில்ல குப்புற படுத்து தூங்க வேண்டியது :0 எங்க அம்மாக்கு வரும் பாருங்க கோவம்.. இந்த மாதிரி இஸ்த்ரி பண்ணின டிரெஸ்ஸ போட்டுட்டு தூங்குறதுக்கு.. அம்மாக்கு எவளோ தான் கோவம் வந்தாலும் இன்னமும் அவன் எதுக்கு டிரஸ் பண்ணிட்டு office ku போறதுக்கு முன்ன தூங்குறான் காலைலன்னு எங்க யாரலயுமே கண்டுபிடிக்கவே முடியல :(
ஆனாலும் என்னோட அண்ணா ரொம்ப நல்ல அண்ணங்க :)
அவனுக்கு என் மேல ரொம்ப பாசம் :) அண்ணா இருக்குற சுகம் இருக்கே.. Am lucky in that way :)
என் தங்கை ஒரு அமைதியான சூறாவளி ;)
ஆளு படு அமைதி ஆனா ரொம்ப சீண்டினா வரும் பாருங்க அழுக ;) ஆமா.. நான் எவளோ திட்டினாலும் சண்டை போட்டாலும் அசராம புக்கு படிக்குற அழகே தனி தான் போங்க ..
அவள மாதிரி யாரும் என் கிட்டயும் அண்ணா கிட்டயும் மொக்கை வாங்கவே முடியாது.. வலிய வந்து வாங்குவா அதான் ஹைலைட்டு ..
ஆனா ரொம்ப அமைதியான நல்ல பொண்ணுங்க.. அப்படியே எனக்கு உல்டா!! சின்ன பசங்க கூட அமைதியா விளையாடுறது, ஹோம் வொர்க் சொல்லி தர்றது, கலர் புக் வாங்கிதர்றது, கோலம் போடுறது இப்படி அப்படின்னு கைக்குள்ள நெறைய திறமை இருக்கு அவ கிட்ட..
எனக்கு ரொம்ப நெருக்கமான தோழி அவ தான்.. நாங்க போட்டுக்காத சண்டையும் இல்ல.. பண்ணாத கலாட்டாவும் இல்லை.. ரெண்டு மணி நேரம் போடுற சண்டைய ரெண்டாவது நிமிஷம் மறந்துடுவோம்.. நாங்க போடுற சண்டைல அம்மாக்குத்தான் தலை வலி வரும்.. ரெண்டாவது நிமிஷம் நாங்க சிரிச்சி பேசுறத பாத்தா காதுல புகை கூட வரும்.. நான் அவ கூட சேந்து போடாத ஆட்டம் இல்லை, பேசாத பேச்சு இல்லை, அழுகாத அழுக இல்ல.. நான் வாய் விட்டு சொல்லாமலே எனக்கு ஏதோ பிரச்சனைனு அவளால சொல்ல முடியும்.. நான் சொல்லாமலே என் மனசுல ஓடுற விஷயத்தை சரியா அவளால கிரகிக்க முடியும்..
அவளுக்கு அக்கானா உயிரு!!
இவங்க ரெண்டு பேரு கூடயும் பிறக்க என்ன தவம் பண்ணினேன்னு தெரில ஆனா இவங்க ரெண்டு பெரும் எனக்கு நிஜமாவே ரொம்ப பெரிய வரம்!!
அவங்க கூட இல்லனா நான் இன்னிக்கு இருக்குற பெர்சனாலிடி எனக்கு இல்ல..
மதிக்கு ஒளி கொடுக்கிறது அந்த ரெண்டு பேரு தான்!!
I love my bro & sis!!
Friday, February 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
touching.. i have a younger sis. due to age diff, we didn't have the opportunity to be there at home..still i am there for her, when she needs it.hope it atleast stays that way...
உலக மகளிர் தினம் பற்றி என்ன நினைக்கறீங்க?
Post a Comment