சிலம்பாட்டம் !!
சிம்பு தான் ஹீரோ .. டபுள் ஆக்ட் வேற :-@
ஆனாலும் சிம்பு படத்தை முதல் நாள் முதல் காட்சியில பாக்க எனக்கு ரொம்ப தான் தைரியம் போங்க !!
கொஞ்சம் திறமையான ஆள் ஆச்சேன்னு எனக்கு சிம்பு மேல நல்ல அபிப்பிராயம் எப்போதுமே உண்டு..
சரி முதல்ல படத்தை பத்தி பேசிடுறேன் அப்புறமா மத்த கதைகள்..
கதை என்னன்னா
விச்சு ஒரு கோயில்ல இருக்குற அமைதியான அப்பாவித்தனமா இளமையான [சாப்பாட்டுல உப்பு காரம் கூட சேத்துகாம வளர்க்கப்பட்ட] பூசாரி! அவனுக்கு அப்பா அம்மா கிடையாது தாத்தா மட்டும் தான்.. ஜானு[சானாகான்] அப்படிங்குற ஒரு பொண்ணு அவன சுத்தி சுத்தி வரா ..
இன்னொரு சைடு துரைசிங்கம்[கிஷோர்] அப்படின்ற வளரும் அரசியல்வாதி, அவனுக்கு தலைமுறையா முத்துவேல்[பிரபு] கூட ஒரு குடும்ப பகை.. ஜெயிலுக்குள்ள இருக்குற முத்துவேல் மேல ரொம்ப விசுவாசமா இருக்குற ஊர்காரங்க, துரைசிங்கத்தை வெடிகுண்டு வச்சு கொலை பண்ண முயல, ஜெயிலுக்குள்ள இருக்குற முத்துவேல ஆள் வச்சு கொலை பண்ண முயற்சி பண்றான் துரைசிங்கம். அந்த முயற்சி தோல்வியில முடிய, முத்துவேலின் விசுவாசிகளில் ஒருவனை கொல்ல அடுத்த முயற்சி.. இந்த முயற்சியில சண்டை கோயில்லுக்கு அருகில் நடக்க, வெகுண்டு எழுகிறார் அம்மாஞ்சியான விச்சு!! முத்துவேலின் விசுவாசிகள் விச்சுவை பாத்தவங்க தமிழ் என்ற பேரு சொல்லி முத்துவேலிடம் விச்சுவை அடையாளம் சொல்லுறாங்க!! முத்துவேல் உடனே தமிழ துரைசிங்கம் ஆளுங்க பாக்குறதுக்கு முன்ன தான் பாக்கணும்னு ரீலீஸ் ஆனதும் விச்சுவ பாக்க போறான்!
போற எடத்துலயும் முத்துவேளுக்கு ஆபத்து காத்திருக்க முத்துவேலை விச்சு காப்பாத்துறதோட மட்டும்மில்லாமல், முத்துவேல் அவனோட பெரியப்பா என்ற உண்மையையும் தெரிஞ்சிக்குறான், அப்படியே அவனின் குடும்ப கதையையும். தமிழ்[சிம்பு] தான் விச்சுவின் அப்பா! தமிழ் பாதி முரட்டு காளை , மீதி விருமாண்டி !! ஒரு நில தகராறு தமிழ் குடும்பத்தையும், வில்லன் குடும்பத்தயும் அழிக்குது.. பிரபு குடும்பத்துல மிச்சம் இருப்பது பிரபு, தமிழின் மனைவி[காயத்ரி என்ற பெயரில் சினேகா] மற்றும் அவள் வயிற்றில் வளரும் விச்சு !! வில்லன் குடும்பத்துல மிஞ்சினது துரைசிங்கம் மட்டுமே!!
இப்போ மிச்சமிருக்குறவங்க எப்படி அடிச்சிக்கிட்டு சாகுறாங்க அப்படிங்குறது தான் கதை!! மிச்சம் இருக்குறது கடைசில விச்சு மட்டும் தான்!! [படம் பாக்க வந்தவங்க கூட இல்ல] :(
இது தாங்க கதை!!
படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடமே விளங்கிவிட்டது படத்தின் தரம் என்ன வென்று !! ரெட்டை அர்த்த வசனங்கள் மற்றும் கோவில் பிரகாரத்தில் நடக்கின்ற கூத்துக்கள், பன்னிரெண்டு வயது சிறுவன் ஒரு குடும்பத்தையே கொலை செய்வது போன்ற கலாச்சார சீரழிவுகள் என படம் நெடுகிலும் கொடுமைகள். கோவிலில் பஞ்சாமிர்தம் செய்வதாக கூறி நடக்கும் கண்ணராவிகளை சென்சார் எப்படி அனுமதித்தது என விளங்கவில்லை.
ரெட்டை அர்த்த வசனங்கள் ஒரு புறம்மிருக்க , நேரிடை அடல்ட்ஸ் ஒன்லி வசங்கள் வேறு வெறுப்பை கிளப்புகின்றன! SJ சூர்யாவோட படங்களுக்கு ஆன நிலைமையை பார்தப்பின்பும் சிம்பு ஏன் இப்படி ஒரு விஷயத்தை பண்ணினாரு? சந்தானம் கொடுமை கொடுமையிலும் கொடுமை! இதுல முகத்துல புலி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து வேற ரொம்ப இம்சை பண்றார் சிம்பு :(
அப்பா சிம்பு வேஷம் போட்டதால பிரபுக்கு பையன் சிம்பு நடந்து வரும்போதெல்லாம் சிம்பு முகம் புலியா தெரியுறது இன்னும் கொடுமை ! அப்பா கெட்டப் சிம்புக்கு நல்லா செட் ஆகுது [as in his hairstyle]. பூசாரியா வருகின்ற சிம்புவிற்கு அவரின் உச்சரிப்புகள் கொஞ்சம் கூட எடுக்கவில்லை! நடுவுல ஒரு சீன்ல நம்ம பதினாறு வயதினிலே கமல் மாதிரி "நான் வீட்டுக்கு போகணும்" ன்னு கெஞ்ச வேற செய்யுறார்! ஹையோ கடவுளே!! சானாகான் எதுக்கு படத்துலன்னு எனக்கு தெரில!! இந்த மாதிரி நிறைய பேரு எதுக்கு வராங்கனே தெரில!!
இத்தனைக்கும் நடுவுல தல தலனு அஜீத் புராணம் வேற பாடுறாங்க பாருங்க அத என்னனு சொல்ல ! பில்லா 2007 படத்தோட "லொள்ளு சபா" காமெடி போல ஏதோ பண்றார் சிம்பு அதுக்கு பில்லா தீம் மியூசிக் வேற!! தாங்கமுடிலடா சாமி!!
பாடல்களில் சிம்பு எப்போவும் போல நல்லாவே வளைஞ்சு வளைஞ்சு ஆடுறார்..
[where is the party tonight பாட்டையாவது நல்ல எடுத்துருக்கலாம்] :(
சிம்பு படத்தின் வில்லன்களை மட்டும்மின்றி பார்க்க வரும் நம்மையும் இப்படி கொல்லத்துனிந்தது ஏனோ?! ஒருத்தர் நம்பி பணம் போட்டா என்ன வேணாலும் பண்ணலாமா?! Come to todays trend simbu please!!
படத்துக்கு ப்ளஸ் :
- யுவனின் இசை [அத கேட்டதால தான் நான் டிக்கெட் புக் பண்ணினேன்] :-@
எவ்வளோ தான் யோசிச்சாலும் வேற எந்த ஒரு ப்ளசும் இல்லைங்க படத்துல!!
மைனஸ்:
- கதை [being an youngster how come simbu dint read the pulse of todays youth?!]
- பழைய வாடை [ரொம்பவே தூக்கலா இருக்கு]
- எப்போ தான் நூறு இருநூறு பேரை அடிக்குறத நிறுத்துவாங்க தமிழ் ஹீரோஸ்?
- இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் நேரிடையான ஆபாசபேச்சுக்கள் .
- ஓவர் டோஸ் சண்டை கட்சிகள்!!
My friends used to hate simbu, whereas i used to like him only because i look at him as a talented person! While he has been brought up n groomed to be a cine artist, simbu dont seem to use the opportunities & the platform given to him in the right way! People's taste & expectation towards movies have changed these days. You give them the same story in different wrappers, am sure even the die hard fans would throw it off! People like me love watching movies irrespective of actors & artists, respective of the screenplay though!!
சிம்பு we expect more from you and just not your swirl dance!!
சிலம்பாட்டம் - சிலம்பரசனின் தப்பான ஆட்டம் !!
Sorry simbu.. Better Luck Next time!
2 comments:
akka i wish ur blog is in english.. its so diff fr me to read t tamil in tamil :(((((
சிம்பு படம் பார்த்து.. பதிவு போடும் அளவிற்கு உங்களை அந்த படம் பாதிச்சிருக்குன்னா அது அவருக்கு கிடைத்த வெற்றி. வேலை வெட்டி எல்லாம் விட்டு இப்படி குந்திக்கிட்டு பதிவு போடறீங்களே.. உங்களுக்கு நிலா பத்தி தெரியுமா? படிங்க இதை...
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE
- கொடும்பாவி
Post a Comment