Thursday, February 5, 2009
காதல் பேசலாம் வாங்க!! பகுதி- 1
காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி இரவினில் உறக்கம் பிடிக்காமல் படுக்கையில் கிடக்கையிலே..
விட்டத்தில் தெரியுமாம் காதல் கொண்டவனின் முகம் உதட்டினில் துளிர்க்குமாம் மெல்லிய சிரிப்பு.. அது எப்படின்னா..
இதயத்தில் சிறகடிப்பவை;
உன் நினைவுகள்,
நீ தந்த கனவுகள்..
அதனால் தான்
பட்டாம்பூச்சியாய் வந்து,
ஒட்டிக்கொள்கிறது
உதட்டோரத்தில்,
ஓர் மெல்லிய
புன்னகை!!
- மதி
இப்படி நெனச்சு உருகி உருகி சந்தோஷமா இருந்தப்போ பாவம் அந்த பொண்ணுக்கு அவ காதலனோட ஒரு சின்ன மனஸ்தாபம்..
அப்போ அந்த பொண்ணு அழுது அழுது உருகி போறா..
"உன்னை நேசிக்க தெரிந்ததைப் போல சுலபமானதல்ல
உன்னை ஒதுக்குவதும் மறப்பதும்..
பம்பரமாய் மனசு சுற்றி சுற்றி களைத்தாலும்
நிற்பதில்லை மனதில் ஓடும் உன் நினைவகள்..
நெருங்க நெருங்க பறக்கும் பட்டாம் பூச்சியாய் நீ
துரத்தி துரத்தி களைத்துப் போகாமல் நான்..
கால்கள் வலித்தாலும் எப்போதும் உன்னுடன் நடக்க விரும்பும் நான்
உன் நிழலைக் கூட தொட அனுமதிக்காமல் நீ..
மறக்கத்தான் வேண்டுமா என கேட்கும் நான்..
உடன் இருக்கத்தான் வேண்டுமா என கேட்கும் நீ..
உண்மைத்தான் போலும் நமக்குள் எதிலும்
ஒத்துப்போகாது என நீ சொல்வதும்!!
- மதி
சில பல ஊடல்களுக்குப் பிறகு காதலனை புரிந்துக் கொண்ட பெண் கூறினாளாம்...
உனது குணங்களில் சிலவற்றை நான் அநியாயத்திற்கு வெறுத்தாலும்..
உன்னில் இருக்கும் நிறைய குணாதிசியங்களை நான் ஆதீதமாய் காதலிக்கவே செய்கிறேன்..
உன் பிடிவாதம் மற்றும் கோவம் முதற்கொண்டு!!
- மதி.
இப்படி போய்ட்டு இருந்த இந்த காதல்.. அப்புறம் என்ன ஆச்சுனா..
அத பகுதி- 2ல பார்போம்!!
இப்போதைக்கு விடை பெறுவது மதி :)
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நெசமாலுமே.. உங்க கவிதை வரிகள் அருமை.
இது ஒரு காதல் க(வி)தை. வாழ்த்துக்கள்.
அடுத்த பகுதி எப்போ? யோசிச்சு எழுதுவீங்களா? எழுதி வச்சு யோசிப்பீங்களா?
- கொடும்பாவி
thx kodumpaavi.. i do both.. :) as in i write the poems before hand & think of the story on the spot!! :)
//காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி இரவினில் உறக்கம் பிடிக்காமல் படுக்கையில் கிடக்கையிலே..
விட்டத்தில் தெரியுமாம் காதல் கொண்டவனின் முகம் உதட்டினில் துளிர்க்குமாம் மெல்லிய சிரிப்பு//
அப்படியா மதி...?
//இதயத்தில் சிறகடிப்பவை;
உன் நினைவுகள்,
நீ தந்த கனவுகள்..
அதனால் தான்
பட்டாம்பூச்சியாய் வந்து,
ஒட்டிக்கொள்கிறது
உதட்டோரத்தில்,
ஓர் மெல்லிய
புன்னகை!!//
அழகு வரிகள்...
//கால்கள் வலித்தாலும் எப்போதும் உன்னுடன் நடக்க விரும்பும் நான்
உன் நிழலைக் கூட தொட அனுமதிக்காமல் நீ..//
காதலில் ஊடலும் அழகு தான்...
கவிதைகள் அழகு...வாழ்த்துக்கள் மதி...
//காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி இரவினில் உறக்கம் பிடிக்காமல் படுக்கையில் கிடக்கையிலே..
விட்டத்தில் தெரியுமாம் காதல் கொண்டவனின் முகம் உதட்டினில் துளிர்க்குமாம் மெல்லிய சிரிப்பு//
//அப்படியா மதி...?//
Appadinu thaan solluranga :)
thx pudhiyavan!! :) its comment of you ppl like u motivate me to be a regular blogger :-)
Post a Comment